பிரித்தானிய நாடோடிகள் முதன் முதலாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்தபோது ஆங்காங்கே ஒரு விசித்திர மிருகம் பல அடி உயரத்திற்கு துள்ளித் திரிவதைக் கண்டார்கள். அவர்கள் இப்படி ஒரு மிருகத்தை முன்னர் அறியாததால் அதன் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றார்கள்.
அங்குள்ள ஆதிவாசிகளுடன் கதைப்பதற்கு இவர்களுக்கு அவர்கள் பாஷை தெரியாததால் சைகையினால் அதன் பெயரென்னவென்று கேட்டார்கள். அவர்கள் அதற்கு ' Kan Ghu Ru' என்று பதிலளித்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் ' kangaroo' என்று இவர்கள் புரிந்து கொண்டார்கள். அதைத்தான் நாங்கள் கங்காரு என்று அழைக்கிறோம்.
உண்மையில் அந்த ஆதி வாசிகள் ' நீங்கள் கேட்பது புரியவில்லை ' என்பதைத்தான் தங்கள் மொழியில் ' Kan Ghu Ru' என்று சொன்னார்கள்.
.
6 comments:
அட அழகான விளக்கம்
வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி
அந்த ஆதிவாசிகள் இன்னும் குணத்தில் மாறாதிருப்பது தான் ஆச்சர்யம் !!
Elephant பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா ? சொல்லுங்கள் ஆவலாக உள்ளேன்
' Kan Ghu Ru' - kangaroo
' நீங்கள் சொன்னதால் புரிந்துகொண்டேன்'
நன்றி
ரசித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி .
ராயர், கருத்துக்கு நன்றி. யானைக் கதை தெரிந்தால் எழுதியிருக்க மாட்டேனா?கிண்டல்தானே?
Post a Comment