
தினமும் ஒரு ஊடல்
தீராத கோபங்கள்
முள்ளான படுக்கையிலே
முதுகு காட்டிப் படுக்கின்றோம்!
நீ திரும்ப மாட்டாயா ?
நித்தமும் நான் தவிக்க
உன் மனமும் அப்படியே
உருகுவது தெரிகிறது.
ஏக்கங்கள் ஆட்கொள்ள
எதிர் பார்த்து எதிர் பார்த்து
முத்தான இரவுகள்
முழுதாக விடிந்து விடும் !!
.
15 comments:
ம்...ஜெஸி என்ன ஊடலா...நான் வரேல்ல நடுவுக்குள்ள !
ஊடல் ...
இந்த தலைப்பு நல்லாயிருக்கும்
இதெல்லாம் இல்லையென்றால் வாழ்க்கை அம்பூட்டு இனிமையாக இருக்காது போல
நல்லாயிருக்கு ஜெஸ்வந்தி:)! அடுத்தடுத்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து. நன்றி:)!
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
:)))
வாவ்.....
அம்மணி,என்ன!அனுபவம் பேசுகிறதோ?
இருக்கட்டும்,இருக்கட்டும் ...
அவர்களிடம் பேசுகிறேன் இப்படி என்
சகோதரியைத் தவிக்கவிட்டு ஊடல்
பண்ணலாமாவெனக் கேட்கிறேன்
ஜெஸி ஊடல் கூடாமல்...
விடிவது அருமை
@ ஹேமா
என்ன ஹேமா இது? ஓடுவதற்கு ஒரு நொண்டிச் சாக்கு சொல்கிறீர்கள்.!
@ ராமலக்ஷ்மி
பல காரணங்களால் வலையத்தில் தொடர்ந்து எழுத முடியவில்லை.
விரைவில் வருகிறேன்
@ ஜமால்
எப்படி இருக்கிறீர்கள்.? அந்தத் தலைப்பும் நல்லாகத் தான் இருக்கிறது.
@ கலா
வருகைக்கு நன்றி கலா. நீங்கள் வேறு கேலி பண்ணுகிறீர்களா?
இருக்கட்டும் . பார்த்துக் கொள்கிறேன்.
@ கவிநயா
வருகைக்கு நன்றி கவிநயா
Thanks..
இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..
சங்கர்.
காதலும் காமமும் அருமையாக வருகிறது. மிக அருமையான பதிவு.
கம்பியில் நடந்து இலக்கை கடந்திருக்கிறீர்கள்.
ஊடலினால் ஏற்படும் இந்த ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும், அவஸ்தைக்கும் ஆனந்தத்திற்கும் இடைப்பட்டது!!
கவிதை அருமை!
நல்ல அருமையான கவிதைவரிகள் வாழ்த்துக்கள்
சகோ .எங்களையும் வந்து சந்தியுங்கள் இந்த நட்புத் தொடர இன்னொரு வாழ்த்துக்கூறி விடைபெறுகின்றேன் .
நன்றி பகிர்வுக்கு .
Post a Comment