நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday, 9 November 2010

இணையத்தில் நான் கண்ட அசாதாரணக் கட்டிடங்கள்

Wonderworks-Upside down Museum
Orlando/Florida


Pickle Barrel House
(Grand Marais/Michigan/United States)



Habitat 67
( Montreal/ Canada)






House on the bridge
Vernon/ France


Hospital bedpan shaped house
In the Alps


Mammy's Cupboard
(Natchez/United States)




Stone House
Portugal





.

Tuesday, 12 October 2010

தமிழ் பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும்!

தமிழுக்கு அமுது என்ற பெயர். அந்த தமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம்

Doctor -- வைத்யநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Paediatrician -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோகரன்
Marriage Counsellor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist --கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Nutritionist -- ஆரோஞசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Mentalist -- புத்திசிகாமணி
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சிற்றகுப்டன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சையப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- கொண்டியாப்பன்
Beggar -- பிச்சை
Bartender--மதுசுதன்
Alcoholic -- கள்ளபிரான்
writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer --நாகமுர்த்தி
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலரமன்சுமோ
Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எதிராஜ்
Batsman -- தண்டியாப்பன்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்தி
Female Spin Bowler -- திருப்புற சுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்தசாரதி

------------ --------- --------

.

Sunday, 3 October 2010

இனியதொரு பயணம் - 5

(என் பயணக் கதையைச் சற்றுத் தாமதமாகத் தொடர்வதற்கு மன்னிக்கவும். ஆவலுடன் தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.)

அடுத்த நாள் இனிதே விடிந்தது. அன்று சலிமா( Sliema) என்ற நகரத்தை சுற்றிவருவதும் , அங்கே பிரசித்தமான கடைகளில் நினைவுச் சின்னங்களை வாங்குவதும் எங்கள் திட்டமாக இருந்தது. கவனித்தீர்களா ? இங்குள்ள நகரங்கள் எல்லாமே சலிமா .புஜிபா, வலேட்டா என்று இஸ்லாமிய பெயர்களைக் கொண்டிருக்கின்றன. மிக ஆரம்ப காலங்களில் இந்த நாடு முற்று முழுதாக இஸ்லாமிய நாடாக இருந்ததுதான் இதற்குக் காரணமாம். இப்போ கிட்டத்தட்ட 100 வீதமும் கத்தோலிக்க நாடாக மாறி இருந்தாலும் அதன் சரித்திரம் அங்குள்ள நகரத்தின் பெயர்களில் ஒட்டிக் கொண்டு இருப்பதைக் காணக் கூடியதாக விருந்தது. சலிமா அதிகமாக மக்கள் வாழும் ஒரு பச்சைப் பசேலென்ற ஒரு இடமென்றும் , அங்கே பிரசித்தமான கைவேலைப் பாடுள்ள கம்பளி உடுப்புகளும், lace வகைகளும் மலிவாகக் கிடைக்குமென்றும் அறிந்தோம். அதுமட்டுமல்லாமல் அந்த நகரம் பல வகையான உணவகங்களால் நிறைந்திருந்தது. அன்று டாக்ஸி ஒன்றில் கடற் கரையருகில் வந்திறங்கினோம். இது ஒரு அழகான இயற்கைக் குடாவாக இருந்தது . கடற்கரை நீண்டு கிடைந்தது. அதற்கு எதிராகவிருந்த தெரு முழுவதும் உணவகங்களும் , மேல் மாடிகளில் ஹோட்டல்களும் அமைந்திருந்தது. மேசைகள் வெட்ட வெளியில் போடப் பட்டு காற்று வாங்கிய படியே உணவுண்டார்கள். தெருக்கள் ஈச்ச மரங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அங்கே நான் கண்ட காட்சிகள் சிலவற்றை படங்களில் பாருங்கள்.





கடற்கரையை எதிர் நோக்கியுள்ள தெரு இது.


இங்கே கடலில் நீச்சலடித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. காரணம் இந்தப் பகுதியில் கடலின் ஆழம் அதிகமாக இருப்பதே. ஆனால் பலவிதமான நீர் விளையாடுக்களும் இங்கே பிரசித்தமானது. பாறைகளிலிருந்து குதித்து diving செய்து கொண்டிருந்தார்கள்.




இந்தக் குடாவின் மற்ற முனை தலை நகரான வலேட்டா என்பதால், இந்தத் துறையில் இருந்த கப்பல்கள் வலேட்டாவுக்குப் பயணித்தன. பல வடிவங்களில் அழகாகப் பயணித்த படகுகளைப் பார்வையிட்ட படி கடற்கரையைச் சுற்றி வந்தோம். இங்கிருந்து வலேட்டா கப்பலில் பயணித்தால் 0.5 கிலோ மீட்டர் என்றும் பஸ்சில் பயணித்தால் 5 kilometer என்றும் அறிந்தோம். அதனால் கப்பலில் ஒருமுறை வலேட்டா துறைமுகத்துக்குச் சென்று வர முடிபு செய்தோம் . நாங்கள் பயணித்த படகை கீழே படமாக்கியுள்ளேன்.


வலேட்டாவின் முழு அழகையும் கப்பலில் போனபோதுதான் அறிந்து கொள்ள முடிந்தது. அங்குள்ள கோட்டைகளின் அழகு சலிமா பக்கத்திலிருந்த போது ரசிக்கக் கூடியதாக விருந்தது.

நாங்கள் வாங்கிய கப்பல் சீட்டில் அன்று முழுவதும் நாங்கள் பல முறை வலேட்டா போய் வரலாமென்று தெரிந்தது. அதனால் இன்னொரு கப்பலில் சலிமா திரும்பி வந்ததும், வாங்க வேண்டிய பொருட்களையும், நண்பர்களும் பரிசுகளையும் தேடி வாங்கிக் கொண்டோம். அடுத்த படியாக பலரும் சிலாகித்த உணவகத்தைத் தேடித் பிடித்தோம். இது ஒரு மொல்டிஸ் உணவகம். இங்கே வரட்டிக் காச்சிய முயல் தான் தேசிய உணவென்று அறிந்தோம். முயல் என்று நினைத்த போது மனதில் ஒரு தயக்கமாக இருந்தாலும் , பார்க்க சுவையாக இருக்குமென்று தோன்றியதால் முதன் முதலாஅதனை சுவை பார்த்தோம். மிக நன்றாகவே இருந்தது. மதிய உணவின் பின் வலேட்டாவில் நாங்கள் பாக்கத் தவறிய சில இடங்களைப் பார்க்கும் எண்ணத்துடன் படகில் திரும்பவும் வலேட்டா வந்தடைந்தோம்.

எங்கள் அனைவரது பாரத்தையும் சுமந்து வலேட்டாவைச் சுற்றிய அந்த குதிரையை கீழே பாருங்கள்.



வலேட்டாவிலுள்ள கோட்டை.



மொல்டாவின் சுதந்திரத்தை நினைவு கூ ர்ந்து எலிசபெத் ராணியினால் 1992 ஆம் ஆண்டு இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. அங்குள்ள மிக வேலைப் பாடுள்ள தேவாலயத்தை தரிசிக்க முடிந்தது. ஆனால் போட்டோ எடுக்க அனுமதி கிடைக்காததால் அதன் அழகை உங்களுக்குக் காட்ட முடியவில்லை என்ற கவலை. தேவாலயத்துக்குள் போகும் போது வாசலில் அவர்கள் தரும் துணியினால் எங்களை முற்றாக மூடிய வண்ணம் உள்ளே செல்லச் சொன்னார்கள். உள்ளே நுற்றுக்கு மேலாக மக்கள் இருந்தாலும் அங்கே நிலவிய நிசப்தம் ஆச்சரியப் பட வைத்தது.
அடுத்த நாள் நாங்கள் Gozo செல்லதிட்டமிட்டிருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பிரயாண agent யை அணுகினோம். அங்கே ஒரு பிருத்தானியப் பெண்மணியைச் சந்தித்தோம். அவர் மூலம் இங்கிலாந்திலிருந்து உல்லாசப் பயணம் சம்பந்தமான படிப்புக் காக பலர் மோல்டா வருவதையும், வந்தவர்கள் பலர் திரும்பிப் போக மனமில்லாமல் இங்கேயே தங்கி விடுவதையும் அறிந்தோம். அவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர்.

(தொடரும்)

Friday, 24 September 2010

வளர்த்த செடி காட்டிக் கொடுத்த கொலைகாரன்





தாவரங்களுக்கு எங்களைப் போல் நரம்புகளோ மூளையோ இல்லாவிட்டாலும் அவற்றினால் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை 1960 ஆம் ஆண்டிலிருந்து பல ஆராச்சியாளர்கள் உறுதிப்படுத்த முனைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் Cleve Backster என்பவர் மிக முக்கியமானவர். இவர் கைதிகளிடமிருந்து உண்மையை வாங்க உபயோகிக்கும் ''பொலிகிறாப் '' என்ற உப கரணத்துடன் சில பரிசோதனைகள் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் அறையில் இருந்த செடி தனது எண்ணங்களைப் புரிந்து கொண்டதை ( psychic )அவதானித்தார். இந்த '' யூறேகா '' அவதானிப்பை பல உயிரியல் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். ஆனாலும் அவரது இந்த ஆராய்ச்சியை பலர் நம்பி தாவரங்களின் இந்த அபூர்வ சக்தி பற்றி மேலும் பல பரிசோதனைகளைச் செய்தார்கள் . அவர்களில் இந்தியா விஞ்ஞானியான ஜெகதீஸ் சந்திரபோஸ் என்பவரும் ஒருவர். இவர்களின் ஆராய்ச்சி எதுவுமே உயிரியல் ரீதியில் அங்கீகாரம் பெறவில்லை என்றாலும் இந்தக் கொள்கையை ஆதரிக்கும் பல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். Backster இதனை முதன் முதலாக அவதானித்ததால் இப்படி தாவரங்களின் உணர்ச்சியை பொலிகிராப் மூலம் அளவிடும் முறையை '' Backster effect'' என்கிறார்கள்.

இங்கிலாந்து நகரத்திலுள்ள யாக்றெபர் என்ற இடத்தில் ஒரு மிக வயதான பெண்மணி தனியாக வசித்து வந்தார். உறவுகள் என்று எவரும் இல்லாத அவர் பல செடிகளை வீடு முழுவதும் வளர்த்து வந்தார். அவரது ஏராளமான சொத்துக்களை அவகரிப்பதர்க்காக இவர் படு கோரமான முறையில் கொலை செய்யப் பட்டார். போலிஸ் சந்தேகத்தில் 12 பேரைக் கைது செய்தாலும் போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்களில் குற்றவாளி யாரென்பதை உறுதிப் படுத்த முடியவில்லை. அப்போது அந்த வழக்குக்குப் பொறுப்பான இன்ஸ்பெக்டர் டெஸ்மொன்ட் என்பவர் இந்த '' பொலிகிராப் '' சோதனையை கொலை நடைபெற்ற அறையிலிருந்த செடியில் செய்வதென முடிவெடுத்தார்.

அந்தச் செடியில் உபகரணம் பொருத்தப் பட்டதும் , ஒருவர் ஒருவராக சந்தேக நபர்கள் அந்த அறைக்குள் கொண்டு வரப் பட்டார்கள். ஒரே ஒரு நபர் வந்த போது உபகரணம் கொடுத்த பொலி கிராப் பதிவுகள் பெரும் மாற்றத்தைக் காட்டியது. அவரைக் கைது செய்த போது கொலைகாரன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதுவே பக்ஸ்டர் க்குக் கிடைத்த பெரு வெற்றி என்று தோன்றுகிறது.

*** பச்க்சட்டர் செய்த பல ஆராச்சிகளை நான் மிக ஆவலுடன் படித்திருக்கிறேன்.என்னைப் போல் விரும்பிப் படிக்க நினைக்கும் நண்பர்களுக்காக இங்கே சில லிங்க் தந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளைத் தாருங்களேன்.
An Interview with Cleve Backster.

Sensing plants-Backster Effect

.

Tuesday, 14 September 2010

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் ?

இங்கே நான் தொகுத் துள்ள படங்களைப் பாருங்கள்.பெண்கள் இப்படிச் செய்வதைக் கண்டதுண்டா?பெண்கள் ஒன்றும் அதிக காலம் வாழவில்லை. ஆண்கள் தான் விரைந்து இறப்பைத் தேடிக் கொள்கிறார்கள் என்பது புரியும்.

.











"Why do men die before their wives? - Because they WANT TO!"





மேலும் இந்தத் தலைப்பில் படிக்க கழுகுக்காக நான் எழுதிய கட்டுரையைஇங்கே படியுங்கள்.

Tuesday, 31 August 2010

இனியதொரு பயணம்-- 4

அன்று முழுவதும் தலை நகரின் பல வீதிகளைக் கால் நடையில் சுற்றிப் பார்த்ததில் எல்லோரும் நன்றாகக் களைத்து விட்டோம். அதனால் இத்துடன் போதும் என்று பல இடங்களைப் பார்க்காமலே திரும்பியதில் மிகவும் கவலை.
அடுத்த நாள் காலை நாங்கள் மோல்டாவுக்கும் கோசொவிர்க்கும் இடையில் இருக்கும் சிறிய கொமினோ தீவுக்குப் படகில் பயணம் செய்யத் தீர்மானித்திருந்தோம். அந்தத் தீவின் மொத்தப் பரப்பு 1. 35 சதுர மைல்கல் தான். அங்குள்ள நிரந்தர வாசிகள் நான்கு பேர் தானாம் . ஒரு போலிஸ் காரரும் , ஒரு பாதிரியாரும் தங்கள் சேவையை வழங்குவதற்காக உல்லாசப் பயணிகள் வரும் அந்த ஆறு மாதங்களில் மட்டும், கோசோ தீவிலிருந்து தினம் பயணிக்கிறார்களாம். அங்குள்ள ப்ளு லகுன் (Blue Lagoon) என்னும் கடற்கரை மிகவும் பிரசித்தமானது. பல குடாக்களிளிருந்து கொமிநோவிற்கு படகுகள் செல்கின்றன. எங்கள் ஹோட்டல் மேனேஜர் , அங்கே கூட்டம் சேர்வதற்கு முன்னர் போய் சேர்வதற்கு ஒரு டிப்ஸ் தந்தார். உல்லாசப்


பயணிகள் சுமார் 100 பேரை ஏற்றக் கூடிய பெரிய கப்பல்களில் பயணிப்பதாகவும்,அவை குறித்த நேரத்தில் மட்டும் புறப்படும் என்றும் ,அதனால் அதற்கு முன்பாக சிறிய நீர் படகுகளில் ( வாட்டர் டாக்ஸி ) சென்றால் வசதியாக இடம் பிடிக்கலாம் என்றும் சொன்னார். அதிலிருந்து அங்கே உல்லாசப் பயணிகள் குவியப் போகிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டோம்.


அவரது அறிவுரை வீண் போகவில்லை. நாங்கள் அங்கே சேர்ந்தபோது ஒரு சிலரே அங்கிருந்தார்கள். சுமார் இருபது நிமிடப் பயணம் தான். அங்கிருந்து கோசோ கரையையும் பார்க்க முடிந்தது. கடற்கரை தெரியாத படி சாய்வு நாற்காலியைப் பரப்பி விட்டிருந்தார்கள். ஒரு ஆசனத்துக்கு பத்து ஈரோ என்றபடி அறவிட்டுக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த ஒரு மலை உச்சியில் ஒருவர் கடை போட்டிருந்தார். சுடச் சுட உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். இந்தப் பணத்தில் தான் அவர்கள் அந்தத் தீவில் வருடம் முழுக்க இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டோம். கீழே வரும் படங்கள் உங்களை அங்கே நேரை அழைத்துச் செல்லும் என்று நினைக்கிறேன்.






காலை பத்து மணியளவில் ,கடற்கரை நிறைந்து விட்டது என்று சொல்லலாம்.எல்லா ஆசனங்களும் போய் பலர் கொதிக்கும் பாறைகளில் தங்கள் உடையைப் போட்டு அதன் மேல் படுத்திருந்தார்கள். கடலை ஒட்டி இருந்த பாறைத் தொடர்களும் அவை இயற்கையாகவே அமைத்துத் தந்த குடாக்களும்,நீல நிற நீரும், பொன்னிற நுண்ணிய மணலும் தாங்கள் தான் இந்தப் பிரதேசத்தின் பிரசித்தத்துக்குக் காரணம் என்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன.


நேரம் போனது தெரியாமல் போனது. அவர்கள் தாயரித்த உணவும் அற்புதம். நான்கு மணிபோல் தீவைச் சுற்றிக் காண்பித்து பின்னர் எங்களை மொல்டாவுக்குக் கொண்டு செல்லும் ஒரு வாட்டர் டாக்சியில் ஏறினோம். அது விரைந்து போனபோது தெளித்த நீர் எங்களை நனைத்தது. கடலின் நடுவில் ஆங்காங்கே தெரியும் பாறைகளும், அவற்றில் காணப் படும் குகைகளும் ஏராளம். ஒவ்வொரு குகை முன்னும் படகுகளை சில நிமிடம் நிறுத்தி படமெடுக்க உதவினார்கள்.






மேலுள்ள குகை வழியாக படகைச் செலுத்தி மெய் சிலிர்க்க வைத்தார்கள்.




நான் எழுதியதை விட படங்கள் உங்களுக்கு கதை சொல்லியிருக்கும் என்று நம்புகிறேன். உண்மையைச் சொன்னால் என் வாழ்வில் இந்த அனுபவத்தை மறக்க முடியாது.
(தொடரும் )

.

Wednesday, 25 August 2010

இனியதொரு பயணம் 3

அந்த உணவகத்தில் வேலை செய்தவர்கள் சரளமாக ஆங்கிலம் கதைத்தார்கள்.அவர்கள் மட்டுமல்ல , எங்களை எதிர் கொண்ட அனைவருமே ஆங்கிலத்தில் உரையாடியதைக் காண வியப்பாகவே இருந்தது. மொல்தீஸ் பாசை கேட்பதற்கு எப்படியிருக்கும் என அறியும் ஆவல் எங்களிடம் மேலோங்கியிருந்தது. அவர்கள் உணவில் மீனும் ,அதற்கு சுவை சேர்க்கும் விதம் விதமான கூட்டுக்களும் பிரசித்தமானவை. அது தவிர ,அவர்கள் மெனுவில் பல இத்தாலிய, ஆங்கில உணவுகளின் கலவை இருந்தது. பரிமாறியவர்கள் ,நட்புடன் நாங்கள் எந்த நாட்டிலிருந்து வந்தோம் என்று விசாரித்தார்கள். அவர்கள் நாட்டுக்கு எந்த உணவு வகைகளும் இறக்குமதி செய்யப் படுவதில்லை யென்றும் , தங்கள் நாட்டில் பெரும் பகுதி வரண்ட பூமி யென்றாலும் உணவுற்பத்தியில் தாங்கள் தன்னிறைவு கொண்டிருப்பதாகப் பெருமையுடன் சொன்னார்கள். அங்கே இயற்கை உரம் மட்டும் தான் விவசாயத்தில் பாவிக்கப் படுவதாகவும் , கிருமி நாசினிகள் மிக அருமையாகத் தான் பாவிக்கப் படுவதாகவும் , பெரும் பாலான உல்லாசப் பயணிகள் இந்த ஒர்கனிக் (organic)
உணவுகளை உண்பதற்காகவே அடிக்கடி வருவதாகவும் சொன்னார்கள்.இந்த விடயம் எங்களுக்குப் புதிய தகவலாக இருந்தது. அவர்கள் உணவும் , உபசரிப்பும் மனத்தைக் கவர்ந்தது.
சாவகாசமாக வெளியே வந்து வாடகை வண்டியொன்றை அழைக்கலாமென்று பார்த்தபோது , நாங்கள் வந்த பாதைகள் எல்லாம் அடைக்கப் பட்டு வாகனங்கள் தடைப் படுத்தப் பட்டது தெரிந்தது. விசாரித்த போது , அருகேயுள்ள தேவாலயப் பெருநாள் என்றும் , அதற்காக இரவு பத்து மணிக்கு வான வேடிக்கை நடக்கப் போவதாகவும் , அதைப் பார்க்க மக்கள் திரண்டு வருவதால் , பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை என்றும் அறிந்தோம். சரியான தருணத்தில் , சரியான இடத்தில் வந்திருக்கிறோம் என்று மகிழ்ந்தோம். திரள் திரளாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தை நாங்களும் தொடர்ந்தோம். சுமார் 40 நிமிடங்கள் நடந்து விட்டோம் என்பதை கடிகாரத்தைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டோம். அந்த இரவில் வீசிய இதமான கடற்காற்று ,நேரத்தை மறக்க வைத்து களைப்பை விரட்டியடித்தது. சற்றுத் தொலைவில் கடற்கரை யோரமாய் இருந்த ஆசனத்தில் எல்லோரும் இடம் பிடித்து வாண வேடிக்கையை இரசித்தோம். அப்போது எமக்கருகில் இருந்த ஒரு வயதான தம்பதிகள் , இங்கே ஒவ்வொரு வாரமும் தேவாலயப் பெருநாள் என்றும் ஒவ்வொரு சனிக் கிழமையும் வாண வேடிக்கை நடக்குமென்றும் விளக்கம் தந்தார்கள். மோல்டாவில் 95 வீதமானவர்கள் கத்தோலிக்கர் என்பதையும் அது ஒரு பரிசுத்த நாடென்றும் கூகிளில் படித்திருந்ததால் ,இந்தத் தகவல் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை .அதிகாலை ஒரு மணிக்குத் தான் எங்கள் இடத்துக்குத் திரும்பினோம். அப்படியிருந்தும் காலை எட்டு மணிக்கே அனைவரும் தயாராகி விட்டோம்.
மொல்டாவின் தலை நகரான வலேட்டா வைச் சுற்றிப் பார்ப்பது தான் அன்றைய எங்கள் திட்டமாகவிருந்தது. தலை நகரில் பல வீதிகள் படிகளாக அமைக்கப் பட்டு கால் நடையாக மட்டும் செல்லக் கூடிய வகையில் அமைக்கப் பட்டிருந்ததாலும், ஒரு முறை மோல்டா பஸ்ஸில் பயணிக்கும் ஆவலுடனும் பஸ் தரிப்பை அடைந்தோம். அங்கே தனியார் பஸ் வண்டிகள் தான். அவர்கள் நினைத்த நேரத்துக்கு பஸ் ஓட்டினார்கள் .அவர்கள் குடும்பமே பஸ்ஸில் இருந்தது.மலைகளைச் சுற்றிச் சுற்றி பயங்கர வேகத்தில் பஸ் ஒட்டிக் கொண்டு ,அதே சமயம் பின்னால் இருக்கும் பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுனர். கிட்டத் தட்ட ரோலர் கோஸ்டரில் ஏறியது போல் ஒரு பிரமை எனக்கு. மோல்டா வந்தது தப்பா அல்லது இந்த பஸ்ஸில் ஏறியது தப்பா என்று தெரியாமல் மனதுக்குள் 'கடவுளே காப்பாத்து' என்று மன்றாடிக் கொண்டோம்.
வலேட்டா பஸ் தரிப்பில் வந்து இறங்கிய போது அதன் முன்னே இருந்த ஒரு பாரிய வாட்டர் பௌண்டன் எங்களை கவர்ந்திழுத்தது.அதை இங்கே பாருங்கள் .




அந்த நாட்டின் சரித்திரத்தை அங்கே காணக் கூடியதாகவிருந்தது. மத்திய தரக் கடலில் அதன் இருப்பிடத்தின் காரணத்தால் பல் வேறு நாடுகளால் மாறி மாறிக் கைப் பற்றப் பட்டதன் காரணத்தால் ஒவ்வொரு ஆட்சியிலும் கட்டப் பட்ட கோட்டைகளும், அரச மாழிகைகளும் , கல் வெட்டுக்களும், அரண்களும் ,நீண்ட வியக்க வைக்கும் கைவண்ணத்தால் கட்டப் பட்ட கட்டிடங்களை கொண்ட வீதிகளும், அதன் அழகை விபரிக்க முடியாத வகையில் அமைந்திருந்தன.
அங்கே பிரசித்தமான குதிரை வண்டிகள் கோட்டைகளைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றில் நாங்கள் பயணித்த போது எடுத்த சில படங்களை இங்கே சேர்த்திருக்கிறேன்.











கடைசியாக ஆங்கிலேயர் அந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 1964 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுள்ளார்கள்.அதன் நினைவாக கட்டப் பட்ட நினைவுச் சின்னத்தை உங்களுக்காகக் கையில் தூக்கி வந்திருக்கிறேன் பாருங்கள்..



தொடரும் )

.